Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வக்கிரமடையும் புதன் பகவான் : எந்தெந்த ராசிகளுக்கெல்லாம் துன்பம் ஏற்படப்போகுதுன்னு தெரியுமா?

வக்கிரமடையும் புதன் பகவான் : எந்தெந்த ராசிகளுக்கெல்லாம் துன்பம் ஏற்படப்போகுதுன்னு தெரியுமா?

ஆகஸ்ட் 24ம் தேதி முதல் செப்டம்பர் 16ம் தேதி வரை சிம்ம ராசியில் புதன் பகவான் வக்ர பெயர்ச்சி அடைகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் மோசமான விளைவுகள் ஏற்படப்போகிறது என்று பார்ப்போம் –

மேஷம்

சிம்ம ராசியில் புதன் பகவான் வக்ர பெயர்ச்சி அடைவதால், மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு சற்று பிரச்சினைகள் நேரிடும். பெண்களுக்கு உடல் நிலை குறைவு ஏற்படும். காதலர்களின் உறவு விரிசல் அடையும். உங்களுடைய பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். தொழில்களில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

மிதுனம்

சிம்ம ராசியில் புதன் பகவான் வக்ர பெயர்ச்சி அடைவதால், மிதுன ராசிக்காரர்களே உங்களுக்கு அசுபமான பலன்கள் கிடைக்கப்போகிறது. இதனால், உங்களுக்கு வீட்டு சூழலில் அலைச்சல் ஏற்படும். பெற்றோர்களுடன் மனகசப்பு ஏற்படும். செலவுகள் அதிகரிக்கும். பணத்தை செலவு செய்யும் போது கவனமாக செலவு செய்யுங்கள்.

சிம்மம்

சிம்ம ராசியில் புதன் பகவான் வக்ர பெயர்ச்சி அடைவதால், சிம்ம ராசிக்காரர்களே, நீங்கள் எடுக்கும் காரியங்களில் சாதகமற்ற சூழ்நிலை ஏற்படும். செலவுகள் அதிகரிப்பதால் உங்களுக்கு மனகவலை ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடல்நல கோளாறு ஏற்படும். தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஏற்படலாம். கவனமாக இருங்கள்.

துலாம்

சிம்ம ராசியில் புதன் பகவான் வக்ர பெயர்ச்சி அடைவதால், துலாம் ராசிக்காரர்களே, உங்களுக்கு பொருளாதார ரீதியில் பின்னடைவு ஏற்படும். பண பற்றாக்குறை நேரிடும். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். காதல் உறவில் விரிசல் அடையும்.

தனுசு

சிம்ம ராசியில் புதன் பகவான் வக்ர பெயர்ச்சி அடைவதால், துலாம் ராசிக்காரர்களே, உங்கள் வாழ்க்கையில் சில இக்கெட்டான சூழ்நிலை ஏற்படும். மனைவியுடன் பிரச்சினை ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் பிரச்சினை ஏற்படும். சக ஊழியர்களுடனான உறவில் பாதிப்பு ஏற்படும். கவனம் தேவை.

Exit mobile version