Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தேச துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு தூக்கு தண்டனை

Pervez Musharraf sentenced to death by Pakistan court for high treason-News4 Tamil Latest Online World News Tamil

Pervez Musharraf sentenced to death by Pakistan court for high treason-News4 Tamil Latest Online World News Tamil

தேச துரோக வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

முஷாரப் பாகிஸ்தானை ஆட்சி செய்து கொண்டிருந்த போது 2007 ஆம் ஆண்டு நவம்பரில் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார். இதற்கு எதிராக முஷாரப் மீது தேச துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கின் காரணமாக துபாய் சென்ற முன்னாள் பாகிஸ்தான் அதிபர் முஷாரப் அங்கேயே தங்கிவிட்டார். தேச துரோக வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அவர் விசாரணைக்கு ஆஜராகாததை தொடர்ந்து அவரது பாஸ்போர்ட் மற்றும் அவருக்கு வழங்கப்படும் சில சலுகைகளை உள்ளிட்டவைகளை முடக்க அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் துபாய்யில் தங்கியிருக்கும் முன்னாள் பாகிஸ்தான் அதிபர் முஷாரப் மருத்துவ சிகிச்சைகாக அங்கு தங்கியுள்ளதாக கூறி வந்தார். இதனையடுத்து அவர் மீது சுமத்தப்பட்ட தேச விரோத வழக்கு தொடர்பான விசாணைக்கு ஆஜராகுமாறு முஷாரப்பை தொடர்ந்து பாகிஸ்தான் அதிகாரிகள் வலியுறுத்து வருகின்றனர். எனினும் அங்கு அவர் மேற்கொண்டு வரும் மருத்து சிகிச்சையை காரணமாக கூறி தொடர்ந்து முஷாரப் மீண்டும் பாகிஸ்தான் திரும்பாமல் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் அவருக்கு எதிரான தேச துரோக வழக்கில் இன்று முஷாரப்புக்கு தூக்கு தண்டனை விதித்து பாகிஸ்தான் நாட்டின் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழக்கியுள்ளது.

இந்த தீர்ப்பை வழங்கிய சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி வாகர் அகமத் சேத் தலைமையில் மூன்று நீதிபதிகள் உள்ளிட்ட அமர்வு தான் தேச விரோத வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முஷாராப்புக்கு தூக்கு தண்டனை வழங்கியுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Exit mobile version