Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

லிப்டில் சிறுவனின் தொடையை கடித்து இழுத்த வளர்ப்பு நாய்! வலியில் துடிதுடித்து போன காட்சி!!..

Pet dog bit the boy's thigh in the lift! The scene of throbbing in pain!!..

Pet dog bit the boy's thigh in the lift! The scene of throbbing in pain!!..

லிப்டில் சிறுவனின் தொடையை கடித்து இழுத்த வளர்ப்பு நாய்! வலியில் துடிதுடித்து போன காட்சி!!..

உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் லிப்ட் ஒன்றில் ஒரு மாணவன் அமைதியாக நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு ஒரு நாயும் அவரது உரிமையாளரும் வந்திருந்தனர்.பின் அந்த மாணவன் பயந்து போய் வெளியே செல்ல லிப்ட் பட்டனை அழுத்த முற்பட்ட போது உரிமையாளர் கையில் பிடிக்கப்பட்டிருந்த நாய் எகிறி அந்த சிறுவனின்  தொடை பகுதியை கடித்தது.

இதன் அருகில் இருந்து பார்த்து கொண்டிருந்த அதன் உரிமையாளர் கொஞ்சம் கூட இறக்கம் இல்லாமல் பார்த்த படி நின்றிருந்தார்.அந்த சிறுவனோ வலியில் அங்கும் இங்குமாய் காலை பிடித்து கொண்டு அலைமோதினார்.கல்லைப்போல பார்த்து கொண்டிருந்த நாயின் உரிமையாளர் அச்சிறுவனிடம் மன்னிப்பு கேக்காமல் சர்வ சாதாரணமாக இறங்கிய இடம் வந்தவுடன் வெளியே சென்றுள்ளார்.

அதனையடுத்து அந்த லிப்ட்டில் வேறொரு நபர் உள்ளே வருகிறார்.வலியில் துடித்த சிறுவனை பார்த்து கேட்டார் அப்போது அந்த சிறுவன் நடந்ததை எல்லாம் கூறினார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.வீடியோ வெளியாகிய நிலையில் தற்போது காவல் துறையினர் அந்த பெண்ணின் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version