Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான மனு! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Petition against Agnibad project! Action order issued by the High Court!

Petition against Agnibad project! Action order issued by the High Court!

அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான மனு! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

அக்னிபாத் திட்டம் என்பது இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் அதாவது ராணுவம்,விமானப்படை,கடற்படை போன்றவற்றில் நான்கு ஆண்டு காலத்திற்கு குறுகிய கால வீரராக இளைஞர்கள்,இளம்பெண்களை சேர்க்கும் திட்டமாகும். இந்த திட்டத்திற்கு இவர்களுக்கு ஆறு மாதம் பயிற்சி வழங்கப்படும். அதன்படி இந்த  முப்படைகளுக்கு அக்னிபாத் திட்டத்தின் மூலம் வீரர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

இவர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவார்கள். இவர்களுக்கு முதலில் உடல் தகுதி தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவை நடைபெறும். மேலும் இந்த சோதனைகள் முடிந்த பிறகு பொது நுழைவுத் தேர்வு எனப்படும் எழுத்து தேர்வு நடத்தப்படுகின்றது. அனைத்தும் முடிவடைந்து தேர்வாகும் வீரர்களுக்கு ஆறு மாத காலம் பயிற்சி அளிக்கப்படும். பிறகு மூன்றரை ஆண்டுகள் அவர்கள் வேலை செய்யலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மூன்றரைக் காலம் முடிவிற்கு வரும்பொழுது மேலும் பணியாற்ற விரும்பும் வீரர்கள் விண்ணப்பிக்கலாம். அதில் 25 சதவீதம் வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் மீதமுள்ள 75 சதவீத வீரர்களுக்கு சேவா  நிதி கொடுத்து வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள். இந்த 25 சதவீத வீரர்கள் நான்கு ஆண்டுகள் முழுவதும் பணியாற்றலாம். அவர்களுக்கு காப்பீடு திட்டமாக 45 லட்ச ரூபாய் இலவசமாக வழங்கப்படும்.

மேலும் பணி முடிவிற்கு வரும்பொழுது பிடிப்பு பணமாக 10 அல்லது 12 லட்சம் ரூபாயில் ஒரு லட்ச ரூபாய் மட்டும் ரொக்கமாக வாங்கிக் கொள்ளலாம். மீதமுள்ள பணத்தை வங்கி பத்திரமாக பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அக்னிபாத்  திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் அக்னி பாத் திட்டம் தேசிய முக்கியத்துவத்தை முன்வைத்து கொண்டுவரப்பட்டதால் முப்படையில் அக்னி வீரர்களை சேர்க்கும் திட்டத்திற்கு எதிரான மனுவை தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version