மத வழிபாட்டு தலங்களுக்கு எதிரான மனு! செப்டம்பர் மாதம் இந்த தேதியில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் தேதி உச்ச நீதிமன்றம் மனு தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. அந்த மனுவானது மதுரா காசியில் உள்ள முஸ்லிம் வழிபாட்டு தலங்களையும் மீட்க வேண்டும் என்று சில இந்து அமைப்புகள் வலியுறுத்தினர். மேலும் மாற்றம் செய்ய தடை விதிக்கும் மத வழிபாட்டுத் தலங்கள் சிறப்பு சட்டத்தின் பிரிவுகள் மற்றும் அனைவரும் சமம் என்ற உரிமையும் மதசார்பற்ற கொள்கையும் மீறும் வகையில் உள்ளதாகவும் கூறி உச்சநீதிமன்றத்தில் தனியாக ஆறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மேலும் ராமர் கோயில் ,பாபர் மசூதி விவாகரத்தை தவிர நாட்டில் உள்ள பிற மத வழிபாட்டு தலங்களில் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று இருந்த நிலையே தொடர வேண்டும் என்றும் கடந்த 1991 இல் கொண்டுவரப்பட்ட சட்டத்தில் இரண்டு,மூன்று, நான்கு பிரிவுகளை நீக்க கோரி பாஜக மூத்த தலைவர் அஸ்வினி உபாத்யாய தாக்கல் செய்தார்.இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி டி ஓய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி இந்த விவகாரம் தொடர்பாக அஸ்வினி உபாத்யாய இட் மனுவாக தாக்கல் செய்ய கோரிக்கை விடுத்தனர்.
மேலும் தலைமை நீதிபதி என் வி ராமன், நீதிபதிகள் ,கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் துவேதி மத வழிபாட்டுத்தலங்கள் சிறப்பு சட்டத்தில் உள்ள சிறப்பு பிரிவுகளுக்கான எதிரான மனுவானது வழக்கு விசாரணை பட்டியலில் இருந்து ஆறு முறை நீக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
மேலும் வரும் செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி இந்த மனு மீண்டும் விசாரணை பட்டியலில் இடம் பெற உள்ளது எனவும் தெரிவித்தார். இடம்பெற்றவுடன் விசாரணை பட்டியலில் இருந்து நீக்கப்பட கூடாது எனவும் உத்தரவிட வேண்டும் எனவும் வாதாடினார். மேலும் அவர் கேட்டதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு இந்த மனு மீதான விசாரணை வருகிற செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி நடைபெறும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.