Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விசாரணைக்கு உகந்த மனு அல்ல.. கெஜ்ரிவால் வழக்கில் மனுதாரருக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்..!!

Petition not suitable for investigation

Petition not suitable for investigation

விசாரணைக்கு உகந்த மனு அல்ல.. கெஜ்ரிவால் வழக்கில் மனுதாரருக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்..!!

டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ஆம் தேதி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அதனை தொடர்ந்து ஏப்ரல் 1ஆம் தேதி முதல் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இடையில் தனக்கு ஜாமீன் வழங்குமாறு கெஜ்ரிவால் அளித்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், டெல்லியை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் அபிஷேக் சவுத்ரி என்பவர் டெல்லி முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவாலின் பதவிக்காலம் முடியும்வரை அவருக்கு சிறப்பு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டுமென டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை அளித்திருந்தார்.

அதன்படி, அந்த மனுவில், “பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை மற்றும் குண்டுவெடிப்பு போன்ற வழக்குகளில் தொடர்புடைய அதிதீவிர குற்றவாளிகளுடன் திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால் இருப்பது அவரின் பாதுகாப்பிற்கு ஆபத்து” என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அவரின் மருத்துவ சிகிச்சை குறைபாட்டை கருத்தில் கொண்டும் ஜாமீன் வழங்குமாறு மனுவில் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இந்த பொதுநல மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி மனுவை தள்ளுபடி செய்ததோடு, மனுதாரருக்கு 75,000 ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டது.

Exit mobile version