Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஜாதி மதம் அற்றவர் சான்றிதழ் வழங்க மனு! உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Petition to issue a certificate of non-caste! Action order of the High Court!

Petition to issue a certificate of non-caste! Action order of the High Court!

ஜாதி மதம் அற்றவர் சான்றிதழ் வழங்க மனு! உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

சென்னை மேற்கு அண்ணா நகரை சேர்ந்தவர் மனோஜ். இவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் எனது மகன் யுவன். மேலும்  மனோஜை வரும் அக்டோபர் மாதம் பள்ளியில் சேர்க்க இருப்பதாகவும் எனது மகனுக்கு ஜாதி மதம் இல்லை என்று குறிப்பிட்ட சான்றிதழ் வழங்க கோரி அம்பத்தூர் ஆட்சியரிடம் விண்ணப்பித்திருந்தேன்.

ஆனால் அவ்வாறு சான்றிதழ் அவர்கள் தர மறுத்துவிட்டனர் எனவே ஜாதி ,மதம் மற்றவர் என்ற வகையில் சான்றிதழ் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தது அப்போது சான்றிதழ் வழங்க ஒப்புக்கொண்டதாக வட்டாட்சியர் கடிதம் வழங்கினார். அதனை அரசு வழக்கறிஞர் கோர்ட்டில் தாக்கல் செய்தார். மேலும் நீதிபதி மனுதாரருக்கு இரண்டு வாரங்களில் ஜாதி, மதம் மற்றவர் என்று சான்றிதழ் வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Exit mobile version