தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை!!

0
156

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி பொதுத் துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப தினந்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதையடுத்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மே மாதம் வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் செய்யாமல் விற்பனை செய்து வந்தன. ஆனால், ஜூன் மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்திக் கொண்டே வருகின்றன.

இந்நிலையில் சென்னையில் இன்று (டிச. 06) காலை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 25 காசுகள் அதிகரித்து 86.25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு லிட்டர் டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 28 காசுகள் அதிகரித்து 78.97 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.