இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையாமல் தொடர்ந்து உயர்ந்த நிலையில் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின.இந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும்போது ரூபாய் கணக்கிலும் குறையும்போது பைசா கணக்கிலும் குறைந்து வருகிறது.
கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து காணப்படுவதால் கச்சா எண்ணெய் விலை உலக அளவில் பெரும் விழ்ச்ச்சியை சந்தித்துள்ளது.இதனால் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளனர்.
மேலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் உள்ள நிலையில் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு விலை ரூபாய் 83.04 விற்கப்படுகிறது.மேலும் டீசல் ரூபாய் 77.17 விற்கப்படுகிறது.
குறிப்பாக பெட்ரோல் மட்டும் நேற்றைய விலையில் இருந்து எந்தவித மாற்றம் இல்லாமலும், டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 40 காசுகள் அதிகரித்தும் விற்பனை செய்யப்படுகிறது