சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான அனுமதியை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கியிருக்கிறது.
இந்த நிலையில், தலைநகர் சென்னையில் 20 ஆவது நாளாக இன்றைய தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதற்கு நடுவில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு சற்று தளர்ந்திருந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அவ்வப்போது அதிகரித்துக்கொண்டே வந்தது. ஆனால் கடந்த 16 தினங்களாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 101 ரூபாய் 40 காசுகளுக்கும், டீசல் விலை 91 ரூபாய் 43 காசுகளுக்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில், 20வது நாளாக தலைநகர் சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் அதே நிலையில், நீடித்து வருகிறது. அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 101 ரூபாய் 40 காசுக்கும், டீசலின் விலை 91 ரூபாய் 40 காசுக்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது