Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

116வது நாளாக மாற்றமில்லாத பெட்ரோல் டீசல் விலை நிலவரம்! உத்தரபிரதேச மாநில தேர்தல் தான் காரணமா?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதனடிப்படையில் இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.

இதற்கு நடுவில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு சற்று குறைத்தது. இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்தது முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரிய அளவில் எந்த விதமான மாற்றமும் ஏற்படவில்லை. இதன் காரணமாக, சென்னையில் கடந்த பல நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரே நிலையில் நீடித்து வந்தது.

இந்த சூழ்நிலையில், கச்சா எண்ணெய் விற்பனையில் 2-வது இடத்திலிருக்கும் ரஷ்யா மற்றும் உக்ரைனிடையே ஏற்பட்ட போர் காரணமாக, கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலருக்கு கூடுதலாக அதிகரித்தது. ஆனாலும் அடுத்தடுத்த தினங்களில் பங்குகளின் மதிப்பு உயர்ந்தது.அதேபோல தங்கம் விலையும் சரிவை கண்டது.

இதன் காரணமாக, சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து 116வது நாளாக இன்றும் மாற்றம் எதுவுமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 101 ரூபாய் 40 காசுக்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை 91 ரூபாய் 43 காசுக்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Exit mobile version