பரபரப்பு! அந்தக் காரியத்தை செய்தது எதற்காக தெரியுமா? காவல்துறையிடம் உண்மையை உளறிய குற்றவாளி!

0
138

நள்ளிரவில் சென்னை தியாகராய நகரில் இருக்கின்ற பாஜகவின் தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தற்போது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலமாக கண்காணித்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை காவல்துறையினர் கைது செய்தார்கள்.மேலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் தொடர்ந்து கமலாலயம் உள்ள பகுதி முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதோடு சம்பவ இடத்திற்கு விரைந்த டி நகர் காவல்த்துறை துணை ஆணையர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணையை தொடங்கினார். மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

அதோடு அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா மூலமாக கண்காணித்து நந்தனத்தைச்சார்ந்த ரவுடி கர்த்தா வினோத் என்பவரை காவல்துறையினர் கைது செய்தார்கள். தீவிரமாக அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில், காவல்துறையினரின் விசாரணையின்போது அந்த நபர் தெரிவித்த காரணம் என்னவென்றால், நீட் தேர்வுக்கு பாஜக தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் அவர் வாக்குமூலம் வழங்கியதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட வினோத் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையிலிருந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இருப்பினும் இந்த நீட் தேர்வு விவகாரத்தில் தொடர்ந்து மத்திய அரசுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருப்பது ஆளும் தரப்பான திமுக தான் அவ்வாறு இருக்கும்போது இந்த வாக்குமூலத்தையும் திமுகவையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒன்று புலப்படுகிறது .

ஒருவேளை அரசு கவர்னரின் மூலமாக மத்திய அரசுக்கு சமாதான பேச்சு அனுப்பியம் மத்திய அரசு எந்தவிதமான சம்மதமும் தெரிவிக்காமல் இருப்பதால் ஆளும் கட்சியினரே இவ்வாறு ஏதாவது மறைமுகமாக செய்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

ஆக எது எப்படி இருந்தாலும் விசாரணையின் முடிவில் தான் உண்மையில் அந்த ரவுடி என்ன காரணத்திற்காக இந்த காரியத்தை செய்தார் என்பது தெரிய வரும்.