தொடர்ந்து 570வது நாளாக மாற்றம் இல்லாத பெட்ரோல் டீசல் விலை! இன்று எவ்வளவு தெரியுமா?
தமிழகத்தில் தொடர்ந்து 570வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இன்றும்(டிசம்பர்12) ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தைகளில் நிலவும் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து உள்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த 2021ல் நவம்பர் மாதம் 3ம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு 110.85 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போல டீசல் ஒரு லிட்டர் 102.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை இதுவே பெட்ரோல் மற்றும் டீசலின் உச்ச விலை ஆகும்.
இந்த விலைதான் 2022வது வருடம் மே 21ம் தேதி வரை தமிழகத்தில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய்க்கும் டீசல் ஒரு லிட்டர் 109.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இதையடுத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2022வது வருடம் மே 21ம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியானது குறைக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 9 ரூபாய் மற்றும் டீசல் 7.50 ரூபாய் குறைக்கப்பட்டது.
அந்த அறிவிப்பின் படி அன்று பெட்ரோல் லிட்டருக்கு 8.22 காசுகள் குறைக்கப்பட்டு 102.63 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போல டீசல் லிட்டருக்கு 6.70 ரூபாய் குறைக்கப்பட்டு 94.24 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை ஆகி வருகின்றது. அதன்படி 570வது நாளான இன்று(டிசம்பர்12) தமிழகத்தில் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 102.63 ரூபாய்க்கும் டீசல் லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.