தேர்தல் முடிந்ததும் வேலையை காட்டிய மத்திய அரசு!

0
115

தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டால் உடனடியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தமிழகத்தில் அதிரடியாக குறைக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்.ஆனால் நேற்றைய தினம் அவர் பதவி ஏற்றுக்கொண்டு 5 கோப்புகளில் கையெழுத்திட்டார் அவர் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். ஆனால் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு சம்பந்தமான கோப்புகளில் அவர் கையெழுத்திடவில்லை என்று சொல்லப்படுகிறது.

இவ்வாறான சூழ்நிலையில், தமிழகம், புதுவை, கேரளா, உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் நடைபெறும் வரை அமைதியாக இருந்த மத்திய அரசு தேர்தல் முடிவுக்குப் பின்னர் மறுபடியும் பெட்ரோல் டீசல் விலையை நாள்தோறும் உயர்த்தி வருகின்றது. இந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தொடர்ந்து நான்காவது தினமாக அதிகரித்திருக்கிறது.

அந்த வேதத்தில் ராஜஸ்தான் மத்திய பிரதேச மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாயை தாண்டி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 102.5 சார்பாகவும் மத்திய பிரதேச மாநிலத்தில் 101 ரூபாய் 86 காசுகளாகவும் அதிகரித்திருக்கிறது.

அதேவேளையில், சென்னையை பொறுத்தவரையில் இன்று பெட்ரோல் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் நேற்று பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 93 ரூபாய் 15 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 86 ரூபாய் 65 காசுக்கும், விற்பனை செய்யப்பட்டது. இந்த வேளையில் இன்று பெட்ரோல் டீசல் விலை எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.