Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கட்டுக்கடங்காமல் உயரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை! இன்றைய நிலவரம் என்ன?

Petrol price in chennai today live-News4 Tamil Online Business News

Petrol price in chennai today live-News4 Tamil Online Business News

இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதனால் வாகன பயன்பாடுகள் மிகவும் குறைவாக உள்ள நிலையில்,உலக நாடுகள் அளவில் கச்சா எண்ணெயின் விலை கடும் விழ்ச்சியை சந்தித்துள்ளது.

இதனையடுத்து உலக நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை மிகவும் குறைந்து உள்ள நிலையில் இந்தியாவில் மட்டும் தொடர்ந்து 17 ஆவது நாளாக இன்றும் பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது. இதற்கு காரணமாக ஊரடங்கில் தற்போது அறிவித்துள்ள தளர்வுகள் காரணமாக சற்றே அதிகரித்த வாகன போக்குவரத்து என கருதப்படுகிறது.

இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 83.04 ரூபாயாகவும், டீசல் விலை லிட்டருக்கு 76.77 ரூபாயாகவும் உள்ளது.இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 17 காசுகளும் டீசல் விலை லிட்டருக்கு 45 காசுகளும் அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிப்பானது அனைத்து பொருட்களின் விலையும் உயர்வதற்கு வித்திடும் எனவே இதனை மத்திய அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது ஏற்க தகாதது என எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்திய அரசின் மீது குற்றம் சாட்டியுள்ளனர்

Exit mobile version