30-12-2021 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

0
147

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாரு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்வதற்கான அனுமதியை இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கியது.

இதன் அடிப்படையில் இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.

நாடு முழுவதும் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருந்த சூழ்நிலையில், இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி வருகின்றன. தமிழக நிதிநிலை அறிக்கையில் வெளியான அறிவிப்பின் அடிப்படையில் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது.

இதற்கிடையே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தது பெட்ரோல் மீதான கலால் வரி ஐந்து ரூபாயும், டீசல் மீதான கலால் வரி பத்து ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததன் காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று குறைந்தது.

இதனை தொடர்ந்து நேற்று சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் 101 ரூபாய் 40 காசுக்கும், டீசலின் விலை 91 ரூபாய் 43 காசுக்கும், விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் 56வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இன்றி இன்றும் அதே விலையில் நீடித்து வருகிறது.