மீண்டும் உயர்ந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை! இன்றைய நிலவரம்

0
132

உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை கடந்த சில மாதங்களாக விழ்ச்சி அடைந்த நிலையில் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்தே காணப்படுகிறது.இதற்கு காரணம் வரி உயர்வு என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 15 நாட்களுக்கு மேலாக இன்று வரை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமதிற்கு உள்ளாகினர்.இந்த பெட்ரோல் விலை உயர்வு காரணமாக மற்ற பொருள்களின் விளையும் அதிகரிக்கக்கூடும் என கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.59 ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு 77.61 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.மேலும் நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் உயர்ந்தும் டீசல் விலை லிட்டருக்கு 17 காசுகள் உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.