உலக நாடுகளில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து வரும் நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் தங்கள் அதிருப்தியை தெரிவித்து
வருகின்றனர்.
கடந்த 7 ஆம் தேதி முதல் அதிகரிக்க தொடங்கிய பெட்ரோல் மற்றும் டீசல் விலை 16 ஆவது நாளாக இன்று(ஜூன் 22) வரை உயர்ந்த படியே உள்ளது.
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 82.87 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 76.30 ரூபாய்க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 82.58 ரூபாய்க்கும் டீசல் விலை லிட்டருக்கு 75.80 ரூபாய்க்கும் விற்கப்பட்ட நிலையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 29 காசுகளும்,டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகளும் உயர்ந்து உள்ளது குறிப்பிடதக்கது.
சென்னையில் கடந்த 16 நாட்களில் (ஜூன் 7) முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 7.33 ரூபாய் ஆக விலை அதிகரித்தும், டீசல் விலை லிட்டருக்கு 8.08 ஆக விலை அதிகரித்தும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மக்கள் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் இந்த பெட்ரோல் டீசல் விலை உயர்வு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.