Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அன்லாக் 1.0வில் பெட்ரோல் விலை உயரும் அபாயம் – வாகன ஓட்டிகள் கலக்கம்

நமது அன்றாட தேவைகளில் ஒன்று பெட்ரோல், டீசல் எரிபொருட்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்தது.

சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த நடைமுறை சுமார் 15 ஆண்டுகளாக அமலில் இருந்தது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இதன் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது.
இந்த முறையில் பெட்ரோல், டீசல் அதிரடியான மாற்றங்களை கண்டு வருகிறது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர் .

பெட்ரோல் டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் செய்யப்பட்டு பிறகு அதிரடியாக ஏற்றம் செய்வதை காண முடிகிறது.

புதுச்சேரி பெட்ரோல் லிட்டருக்கு ரூ69.39விற்கும் டீசல் ரூ65.16விற்கும்,

பெங்களூருவில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ73.55விற்கும், டீசல் ரூ65.96விற்கும்

திருவனந்தபுரம் பெட்ரோல் லிட்டருக்கு ரூ72.99விற்கும், டீசல் லிட்டருக்கு ரூ67.19விற்கும்

ஐதராபாத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ73.97விற்கும், டீசல் ரூ67.82 விற்கும்

டெல்லி
யில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ71.26,டீசல் லிட்டருக்கு ரூ69.39விற்கும் விற்கப்படுகிறது.

சென்னையில் கடந்த 28வது நாளாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ75.54ற்கும், டீசல் லிட்டருக்கு ரூ68.23 விற்கும் விற்கப்படுவதில் எவ்வித மாற்றமுமின்றி காணப்படுகிறது. மேலும் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்த நிலையில் இனி படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டால் பெட்ரோல்,டீசல் விலை உயர்த்தப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுமுடக்கத்தினால் ஏற்பட்ட வேலையின்மையால் வீட்டு நிர்வாகத்தை ஏற்ற தனிமனித பொருளாதாரம் சரிவடைந்த நிலையில் இந்த பெட்ரோல் விலை உயர்வு தகவல் அவர்களை கலங்க வைத்தது.

Exit mobile version