Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

‘சிப்’கள் மூலம் நூதனக் கொள்ளையில் பெட்ரோல் பங்குகள் : போலீசார் அதிரடி முடிவால் 13 பங்குகளில் சீல்

சிப் கள் மூலம் நூதனக் கொள்ளையில் பெட்ரோல் பங்குகள் : போலீசார் அதிரடி முடிவால் 13 பங்குகளில் சீல்

ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் பெட்ரோல் பங்குகளில் ‘சிப்’களை பொருத்தி மோசடி செய்ததால் 39 பெட்ரோல் பங்குகள் சீல் வைக்கப்பட்டு 33 பேரை கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் விநியோகத்தில் மோசடி நடைபெறுவதை மாவட்ட போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் இது தொடர்பாக அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் சோதனை மேற்கொண்டபொழுது மூன்று பெட்ரோல் பங்குகள் எலக்ட்ரானிக் சிப்களை பொருத்தி மோசடி செய்தது தெரிய வந்தது. பெட்ரோல் ,டீசல் விநியோகம் செய்யப்படும் இயந்திரங்களில் எலக்ட்ரானிக் சிப்களை பொருத்துவதன் மூலம் 1000 மில்லி லிட்டருக்கு (ஒரு லிட்டர்) 40 முதல் 70 மில்லி லிட்டர் வரை குறைந்த எண்ணெயானது வெளியேறும்.

ஆனால் வெளியில் அந்த இயந்திரம் ஒரு லிட்டர் வினியோகத்தாகவே வாடிக்கையாளர்கள் முன் காண்பிக்கும் . இதனை வாடிக்கையாளர்க்ளுக்கு தெரியாமல் கொள்ளையடிக்க ஒரு புதிய முயற்சியாக நடந்து வருகிறது.

இந்த மோசடி தொடர்பாக போலீஸார் 3 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தியபோது, தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத்தை சேர்ந்த முகமது என்பவர் சிப்களை ரூபாய் 60 ஆயிரத்திற்கு வழங்கியதாக தெரிவித்தனர் .இதனை தொடர்ந்து ஹைதராபாத் போலீசாருக்கு தகவல் கொடுத்து ஹைதராபாத் காவல்துறை ஆணையர் உத்தரவின் பேரில் நேற்று சைபரபாத் பகுதி முழுவதும் உள்ள பங்குகளை சோதனை நடத்தினர்.

அங்கு 13 பெட்ரோல் பங்குகள் இதுபோன்ற சிப்களை பொருத்தி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது .மேலும் இது தொடர்பாக 22 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.இதற்கு முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முகமது தலைமறைவாகி உள்ளதால் அவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக ஆந்திராவில் இதுவரை 26 பெட்ரோல் பங்குகள் சீல் வைக்கப்பட்டு 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .இதைத்தொடர்ந்து ஆந்திரா, தெலுங்கானா ஸ்ரீகண்ட ஆகிய இரண்டு மாநிலங்களில் உள்ள அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாடிக்கையாளர்களின் கவனம்: பெட்ரோல் ,டீசல் அளவு குறைவாக இருந்தாலோ அல்லது கலப்படம் இருந்தால் வாடிக்கையாளர்கள் சந்தேகப்பட்டால் அது தொடர்புடைய பெட்ரோல் பங்கின் புகார் செய்ய வேண்டும் என்றும் பங்கு உரிமையாளர்கள் அவற்றை பரிசோதித்து காண்பிக்க வேண்டும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் கூறியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் அதனை சோதனை செய்யும் வகையில் அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் சோதனைக் கருவி வழங்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் கூறியுள்ளது.

பெட்ரோல் ,டீசல் பங்குகள் விற்பனை எந்திரங்கள் எண்ணைய் நிறுவனத்தில் உள்ள கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதனால் விற்பனையாளர்கள் ஏதாவது மோசடி செய்தால் அதனை கணினிக் காட்டி கொடுத்துவிடும் .இது தவிர எண்ணைய் நிறுவன விற்பனை அதிகாரிகள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை பெட்ரோல் பங்குகளுக்கு நேரில் சென்று அங்கு விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் அவற்றின் அளவு, தரம் பற்றி பரிசோதனை செய்த பின்னர் அரசின் தொழிலாளர் நலத் துறையின் கீழ் செயல்படும் எடை மற்றும் முத்திரை பிரிவு சார்பில் ஆண்டுக்கு ஒருமுறை பெட்ரோல் டீசல் விற்பனை இந்திரங்களில் ஆய்வு செய்யப்படுகிறது. இந்தியன் ஆயில் பொதுத்துறை நிறுவனங்கள் மக்களிடையே கவனம் தேவை என்று கூறியுள்ளனர்.

Exit mobile version