கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு போட்டு விட்டதால் மக்கள் வீட்டிலே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால் சினிமா நட்சத்திரங்கள் வேலை இல்லாமல் வீடுகளில் முடங்கி உள்ளன.
“பேட்ட” படத்தில் வில்லனாக அடித்தவர் தற்பொழுது விவசாயம் செய்து கொண்டிருப்பது திரைத்துறையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.ஊரடங்கு காரணமாக மும்பையில் தனது வீட்டிலே முடங்கி கிடந்த பேட்டை பட வில்லன் நவாசுதின் சித்திக்கிற்கு சிறிது காலமாக பல பிரச்சனைகள் நேர்ந்துள்ளது.
மனைவி விவாகரத்து கேட்டு தொல்லை செய்வது, மேலும் அவரது சகோதரி உடல் நிலை குறைவு காரணமாக உயிர் இழந்து விட்டார். அடுத்து அவரது அம்மாவுக்கு உடல் நிலை பாதிப்பு என தொடர்ந்து பல பிரச்சனைகள் ஏற்பட்டு வந்துள்ளது.

இதிலிருந்து வெளியே வந்து மனதை அமைதி படுத்தி கொள்ள இவர் தனது சொந்த ஊரான உத்திரபிரதேசம் புதனாவிற்கு வந்து தனது சொந்த நிலத்தில் விவசாயத்தை செய்து வருகிறார் .மேலும் இவர் வேலை செய்யும் புகை படங்களை சமூக வலைதளங்களில் பதிப்பு செய்து “நல்லா இருக்கா” என கேட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.