Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்கள் தொகுதியில் முதல்வர்! செயல்பட தொடங்கிய திட்டம்!

உங்கள் தொகுதியில் முதல்வர்! செயல்பட தொடங்கிய திட்டம்!

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற துறையின்கீழ் வாங்கப்பட்ட மனுக்களில் 549 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்திலன் சமயத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியின் மூலமாக வாங்கப்பட்ட மனுக்கள் மீது நூறு தினங்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற புதிய துறையை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

அதேபோல உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு அதற்கு ஷில்பா பிரபாகரன் என்பவர் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்ட அவரிடம் சென்ற 9ஆம் தேதி முதல் அனைத்து மனுக்களும் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எல்லா மாவட்டங்களில் இருந்தும் 72 மரப் பெட்டிகளிலும், 275 அட்டை பெட்டிகளிலும், சுமார் 4 லட்சம் மனுக்கள் வாங்கப்பட்டன. இந்த மனுக்களை மாவட்ட வாரியாக பிரித்து தமிழ்நாடு மின் ஆளுமை மூலமாக பராமரிக்கப்படும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதுவரையில் சுமார் 70 ஆயிரம் மனுக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒவ்வொரு மனுவும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டபின் அதற்கென்று தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்பட்டு அந்த எண்ணுக்கு உரிய மனுதாரருக்கு குறுஞ்செய்தி மூலமாக அனுப்பி வைக்கப்படுகிறது. மனுக்களில் கொடுக்கப்பட்டிருக்கின்ற விவரங்கள் மற்றும் அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து தகுதியான ஒவ்வொரு மனுவுக்கும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதற்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தத் திட்டத்தின்படி ராணிப்பேட்டை, வேலூர், திருவாரூர், சென்னை, திருவள்ளூர், ஆகிய ஆறு மாவட்டங்களில் இருந்து வழங்கப்பட்டிருக்கின்ற 549 மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த திட்டம் செயல்பட ஆரம்பித்ததை குறிப்பிடும் விதத்தில் 10 பயனாளிகளை நேரில் வரவழைத்து அவர்களுக்கு முதலமைச்சர் நலத்திட்ட உதவிகளை நேற்றையதினம் வழங்கியிருக்கிறார்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் மூலமாக 549 கோரிக்கை மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு அதில் இருந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. மனுவை பிரித்த 12 நாட்களில் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட இருப்பதாக வாங்கப்பட்ட மனுக்கள் 0.14 சதவீத அளவு தீர்வு காணப்பட்டதாகவும், தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட மனுக்கள் எல்லாமே முறையாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு விரைவாக உரிய நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version