Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரிடம் அனுமதி கோரிய ஃபைசர் நிறுவனம்!

ஃபைசர் நிறுவனமும் பயோன்டெக் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்து கொள்வதற்காக, அந்நிறுவனத்தின் இந்திய பிரிவு, தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் இடம் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.

அதாவது ஃபைசர் நிறுவனமும் பயோன்டெக் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை, முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, இந்தியாவிற்குள் அவசரகால பயன்பாட்டிற்கு உபயோகித்து கொள்ள  அனுமதி வழங்க கோறி விண்ணப்பித்துள்ளது.

அதுமட்டுமின்றி இந்த நிறுவனம் அனுமதி கோரிய விண்ணப்பத்தில் புதிய சட்ட திட்டங்களின் அடிப்படையில், இந்த கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் கிளினிகல் பரிசோதனையை மேற்கொள்ளாமலேயே, இந்தியாவிற்குள் விற்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

மேலும் ஃபைசர் நிறுவனமும் பயோன்டெக் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த  கொரோனா தடுப்பு ஊசியை வழங்குவதற்கு 2ஆம் தேதியன்று பிரிட்டனிலிருந்து தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் பஹ்ரைனும் 4ஆம் தேதியன்று தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Exit mobile version