PhonePe வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி.! இனி சேவை கட்டணம்.!!

0
171

போன் பே வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்தால் இனிமேல் சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது வாடிக்கையாளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில், ஒவ்வொருவரும் தங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து போன் பே மற்றும் கூகுள் பே வழியாக பணத்தை பரிமாற்றம் செய்து வருகின்றனர்.

இதனால், வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு செல்லவேண்டிய அவசியமில்லை. இதனிடையே, போன் பே மூலமாக வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்து வருவதற்கு தற்போது சேவை கட்டணத்தை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அந்த வகையில், ரூ.50 முதல் ரூ.100க்குள் ரீசார்ஜ் செய்தால் சேவைக் கட்டணமாக ரூ.1 வசூல் செய்யப்படும் எனவும், 100க்கு மேல் ரீசார்ஜ் செய்தால் ரூ.2 வசூல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் போன் பே வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.