Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அஜித்தின் 64 திரைப்படத்தின் புகைப்படம்! ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு!

Photo from Ajith's 64 movie! Great reception among fans!

Photo from Ajith's 64 movie! Great reception among fans!

 அஜித்தின் 64 திரைப்படத்தின் புகைப்படம்! ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு!

அஜித்திற்கு என பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அஜித் நடிப்பில் வெளியாகும் திரை  படங்கள் சூப்பர் ஹிட் ஆகவே அமைந்துள்ளது. ஒரு சில படங்கள் ஹிட் கொடுக்கவில்லை என்றாலும் அதற்காக சோர்வடையாமல் அஜித் தனது ரசிகர்களுக்கென தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். அந்த வகையில் அஜித் 3வது முறையாக இளம் இயக்குனர் வினோத்துடன் கூட்டணி அமைத்து தனது 61வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பெரிய ஸ்டூடியோவில் செட் போட்டு  படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இடைவேளை விடப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது.படப்பிடிப்பின் போது எடுக்கப்படும் வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இந்த நிலையில் அஜித்  படம் சம்பந்தப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதாவது படத்திற்காக போடப்படட பிரம்மாண்ட வங்கி செட் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.

Exit mobile version