Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆசிரியரால் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பள்ளியில் மனநலம் குன்றிய 74 குழந்தைகளுக்கு கொரோனா பாதித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

பால விஹார் என்ற பள்ளியில் 175 மனநலம் குன்றிய மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். கொரோனா காலகட்டத்தில் அனைத்தும் ஆன்லைன் மையம் ஆகிய போதும் குழந்தைகளுக்கு எப்படி வந்தது என்று தெரியாமல் இருந்து வந்துள்ளது.

அனைத்துப் பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் எடுக்க கோரி தமிழக அரசு அறிவுறுத்திய போதும், இந்த பள்ளியில் ஆசிரியர்களை வரவழைத்து பாடம் எடுக்கப் பட்டதாக சொல்லப்படுகிறது.

அவ்வாறு வருகை தந்த ஆசிரியர் ஒருவரின் மூலம் 74 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்ட சோதனையின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அதிலும் 74 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் ஊடகத்துறையினர் உள் சென்று விசாரிக்க அனுமதி கோரிய போது நோய் தொற்று ஏற்பட்டு உள்ள நிலையில் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டாது என அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சாதாரண மக்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருக்கும் பட்சத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே குறைவாக இருக்கும். இப்படிப்பட்ட கொரோனா சூழ்நிலையில் ஆசிரியர்களை வரவைத்து குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு உள்ளதால் பள்ளி நிர்வாகம் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் 74 குழந்தைகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்குமாறு சமூக ஆர்வலர்கள் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளனர்.

Exit mobile version