Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பைல்ஸ்? மலத்தில் இரத்தம் ஊத்துதா? பிரச்சனை சரியாக.. இந்த இரண்டு கீரையை அரைத்து காலையில் ஒரு கிளாஸ் குடிங்க!!

மனிதர்கள் அனுபவிக்கும் கொடிய பாதிப்புகளில் ஒன்று பைல்ஸ்.இந்த பாதிப்பு ஏற்பட்டால் மலம் கழிக்கும் பொழுது மிகுந்த வேந்தனையை அனுபவிக்க நேரிடும்.சிலருக்கு பைல்ஸ் தீவிரமாவதால் மலத்துடன் இரத்தமும் சேர்ந்து வெளியேறும்.இந்த பைல்ஸ் பாதிப்பில் இருந்து மீள நீங்கள் கானாவாழை ஜூஸ் செய்து பருகலாம்.

தெருவோரங்களில் வளர்ந்து இருக்கும் அபூர்வ மூலிகையான கானாவாழை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.இதை பைல்ஸ் நோய்க்கான மருந்தாக எப்படி பயன்படுத்தலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)கானாவாழை – ஒரு கப்
2)துத்தி கீரை – கால் கப்

தயாரிக்கும் முறை:-

ஒரு கைப்பிடி கானாவாழை கீரை பறித்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அடுத்து கால் கப் துத்தி கீரையை பறித்து தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.இவை இரண்டையும் மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த ஜூஸை வடிகட்டி கொண்டு தினமும் காலை நேரத்தில் ஒரு கிளாஸ் அளவு குடித்து வந்தால் பைல்ஸ் பாதிப்பு குணமாகும்.பைல்ஸ் பாதிப்பின் போது ஏற்படும் இரத்தப்போக்கு பிரச்சனை குணமாக இந்த கானாவாழை ஜூஸ் பருகலாம்.

கானாவாழையின் பிற பயன்கள்:-

1)இந்த கானாவாழையை அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.பால்வினை நோய் பாதிப்பு குணமாக இந்த கானாவாழை இலையை மருந்தாக பயன்படுத்தலாம்.

2)பெண்கள் சீக்கிரம் கருவுற கானாவாழை இலை ஜூஸ் செய்து பருகலாம்.கானாவாழை இலையுடன் ஒரு கொட்டைப்பாக்கை சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து சாப்பிட்டால் தாம்பத்திய உறவில் மகிழ்ச்சி கிடைக்கும்.

3)இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகள் அகல கானாவாழை கீரையை உட்கொள்ளலாம்.சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரைய கானாவாழை ஜூஸ் செய்து பருகலாம்.

4)உடலில் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்த கானாவாழை இலையை அரைத்து மஞ்சள் கலந்து பூசலாம்.

5)பெண்களின் மார்பக கட்டிகள் குணமாக கானாவாழை சாறு தயாரித்து பருகலாம்.மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் கானாவாழை இலையுடன் தூதுவளை இலை சேர்த்து ஜூஸாக அரைத்து பருகலாம்.

Exit mobile version