Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பைல்ஸ் பிரச்சனையா? அறுவை சிகிச்சையே வேண்டாம்.. இந்த டிப்ஸ் மட்டும் ரெகுலரா பாலோ பண்ணிட்டுவாங்க!!

தற்பொழுது மனிதர்களுக்கு மூல நோய் பாதிப்பு ஏற்படுவது அதிகரித்த வண்ணம் உள்ளது.உணவுப் பழக்க வழக்கங்களால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மூல நோய் வந்தால் மலம் கழிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படும்.மலத்தில் அதிகளவு இரத்தம் வெளியேறுகிறது என்றால் அது மூல நோய் பாதிப்பிற்கான அறிகுறியாகும்.மூல நோய் உள்ளவர்கள் சில விஷயங்களை பின்பற்றி வந்தால் சீக்கிரம் அதில் இருந்து மீண்டுவிடலாம்.

1)நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.வாழைத்தண்டு,அவரைக்காய்,சுரைக்காய்,பீர்க்கங்காய்,பீன்ஸ்,கோவைக்காய் போன்றவற்றில் நார்ச்சத்து மிகுந்து காணப்படுகிறது.

2)மூல நோய் புண்கள் ஆற மணத்தக்காளி கீரையை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.சின்ன வெங்காயத்தை எண்ணெயில் வதக்கி உப்பு சேர்த்து சூடான சாதத்தில் வைத்து சாப்பிட்டால் மூலம் குணமாகும்.

3)கருணைக்கிழங்கை புளி சேர்க்காமல் குழம்பு வைத்து சாப்பிடலாம்.துத்திக்கீரையை பொடித்து மோரில் கலந்து குடிக்கலாம்.

4)துத்தி இலையில் கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் புண்கள் சீக்கிரம் ஆறும்.

5)தினமும் ஒருவேளை தயிரை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.பிரண்டை தண்டில் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

6)டீ,காபி குடிப்பதை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும்.அதற்கு பதில் துத்தி கீரையை பொடித்து தண்ணீரில் கொதிக்க வைத்து பருகலாம்.

7)தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.குறைந்தது எட்டு மணி நேர தூக்கத்தை அனுபவிக்க வேண்டும்.

8)மாதம் நான்கு முதல் ஐந்து முறை தலைக்கு எண்ணெய் வைத்து குளிக்க வேண்டும்.நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உட்கொள்ள வேண்டும்.தர்பூசணி,முலாம் பழம்,ஆரஞ்சு,கொய்யாப்பழம்,வாழைப்பழம் போன்றவை மூல நோயை சீக்கிரம் குணப்படுத்தும்.

9)மலத்தை அடக்கி வைக்காமல் வெளியேற்ற வேண்டும்.காரம் மற்றும் புளிப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

மூல நோய் பாதிப்பை குணமாக்கும் மூலிகை பானம் தயாரிக்கும் முறை:

தேவையான பொருட்கள்:

**சீரகம் – அரை தேக்கரண்டி
**வர கொத்தமல்லி – அரை தேக்கரண்டி
**ஓமம் – கால் தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:

1.முதலில் அடுப்பில் வாணலி ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் அரை தேக்கரண்டி சீரகம்,அரை தேக்கரண்டி வர கொத்தமல்லி மற்றும் கால் தேக்கரண்டி ஓமம் சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ள வேண்டும்.

2.பிறகு இவற்றை நன்றாக ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு பொடித்துக் கொள்ள வேண்டும்.

3.அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு அரைத்த பொடியை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இதை வடிகட்டி பருகி வந்தால் மூல நோய் பாதிப்பு முற்றிலும் குணமாகும்.

Exit mobile version