Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

30 ஆக அதிகரித்த புனித யாத்திரையின் உயிர் பலி!! காவல் படை அதிகாரிகள் அறிவிப்பு!!

Pilgrimage death toll rises to 30!! Police Officers Announcement!!

Pilgrimage death toll rises to 30!! Police Officers Announcement!!Pilgrimage death toll rises to 30!! Police Officers Announcement!!

30 ஆக அதிகரித்த புனித யாத்திரையின் உயிர் பலி!! காவல் படை அதிகாரிகள் அறிவிப்பு!!

அமர்நாத் யாத்திரை சென்றால் பாவங்கள் விலகும் என்றும் பலர் நம்பிகிறார்கள். அமர்நாத்தில் உள்ள குகை கோவில் 5000 ஆண்டுகள் பழைமையானது என்று புராணங்களில் உள்ளது.  இந்த குகை கோயில் கடல் மட்டத்திலிருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைத்துள்ளது.மேலும்  ஆண்டுதோறும் அமர்நாத் பனி லிங்கத்தை  தரிசிக்க  லச்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை வருவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 01 ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பயணத்தை மேற்கொள்வதற்கு பக்தர்களுக்கு பல ஏற்பாடுகள் செய்து தரப்பட்டுள்ளது. இந்த யாத்திரை 62 நாட்கள் நடைபெற இருந்தது.  சில நாட்கள் முன்பு யாத்திரை செல்லும் பகுதிகளில் மோசமான வானிலை யாத்திரை  தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பின் பயணம் மீண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதனையடுத்து இந்த குகை கோவிலுக்கு செல்ல இரண்டு வழிகள் உள்ளது. இதற்கு பால்டால் வழியாக சென்றால் 3 முதல் 4 நாட்கள் வரை ஆகும். மேலும் இதற்கு ஹெலிகாப்டர் சேவைகளும் உள்ளது. இந்த நிலையில் 17  நாட்களில் முடித்த நிலையில் இதுவரை 2.30  லட்சம் பக்தர்கள் குகை கோயிலை தரிசனம் செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. அதனையடுத்து 6,200 பேர் அடங்கிய குடு பகவதி நகர் முகாமிலிருந்து சென்றுள்ளர்கள்.

அதனை தொடர்ந்து பகதர்கள் வசதிகளுக்கு மருத்துவ முகாம்கள் மற்றும் சமையலறைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்னும் லச்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்யள்ளதாக கூறப்படுகிறது.

அதனையடுத்து அதிகாரிகள் 62 நாட்ககுள் அமர்நாத் புனித யாத்திரையை 10 லட்சத்திற்கு மேற்பட்ட பகதர்கள் சுவாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பஹல்காம் பாதையில் 2 பக்தர்களுக்கும் , பால்டால் பாதையில் ஒருவரும் உயிரிழந்து உள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் இந்த ஆண்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.

குகை கோவில் உயரமான பகுதியில் அமைந்துள்ளதால் குறைத்த அளவில்  ஆக்ஸிஜன் கிடைக்கும். இதனால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த யாத்திரை ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி நிறைவடைய உள்ளது.

Exit mobile version