Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஓஹோ இதுக்குத்தான் பிள்ளையார் சுழி போடுறாங்களா?

முன்பெல்லாம் ஓலைச்சுவடியில் தான் எழுத்தாணி கொண்டு எல்லோரும் எழுதி வந்தார்கள் அந்தவிதத்தில் உ என்ற எழுத்தை எழுதும் போது ஓலைச்சுவடியின் வலிமையும் எழுத்தாணியின் கூர்மையும் தெரிந்துவிடும் என்கிறார்கள்.

செம்மை இல்லாத ஓலைச்சுவடி கிழிந்துவிடும் இதன் காரணமாகவே எழுத ஆரம்பிப்பதற்கு முன்பாக உ என்ற எழுத்தை நம்முடைய முன்னோர்கள் கடைபிடித்து வந்தார்கள் என்பது ஆக்கப்பூர்வமான கருத்தாக இருக்கிறது.

ஆனால் இதற்கு ஆன்மிகத்தின் வழியே இன்னொரு கருத்தும் சொல்லப்படுகிறது. தமிழ் உயிர் எழுத்துக்களில் உ, கரம் என்ற எழுத்து முக்கியத்துவம் வாய்ந்தது என சொல்லப்படுகிறது.

அந்த எழுத்து விநாயகப் பெருமானுக்கு அர்ப்பணிப்பு செய்யப்பட்டது எனவும் சொல்லப்படுகிறது. ஆகவே இதனை பிள்ளையார் சுழி என்றும் சொல்கிறார்கள்.

விநாயகர் தன்னுடைய தாய் தந்தையரான உமையாள், உமையவனை துணையாகவும், முதன்மையாகவும், கொண்டிருக்கும் இடத்தில் சுருக்கமாக உ என்ற எழுத்தை உருவாக்கியதாக சொல்லப்படுகிறது.

விநாயகர் தடைகளை நீக்குபவர் ஆகவே நம்முடைய காரியங்கள் அனைத்தும் தடைகளின்றி வெற்றி பெறுவதற்காக விநாயகரை தொடர்ந்து நாமும் அவருடைய உ என்ற பிள்ளையார் சுழியை பயன்படுத்தி வருகிறோம் என சொல்லப்படுகிறது.

ஓ என்ற எழுத்தானது ஒரு சிறிய வட்டத்தில் தான் ஆரம்பமாகும் என்பதற்கு தொடக்கமுமில்லை முடிவுமில்லை, இறைவன் தொடக்கமும் முடிவும் இல்லாதவர் என்பது இதனை குறிக்கிறது என்கிறார்கள்.

வட்டத்தை தொடர்ந்து வரும் கோடு வளைந்து பின்னர் நேர்மை என்று பொருள் வாழ்க்கையில் வளைந்து கொடு அதேசமயம் நேர்மையை கைவிடாதே என்பதே இதன் தத்துவம். பிள்ளையார் சுழி போட்டு செயலை ஆரம்பிப்பவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.

Exit mobile version