மீண்டும் வந்த மஞ்சப்பை நடைமுறை!!! சுப்ரியா சாகு அவர்கள் டுவீட்!!! 

0
91
#image_title
மீண்டும் வந்த மஞ்சப்பை நடைமுறை!!! சுப்ரியா சாகு அவர்கள் டுவீட்!!!
சென்னை மாநாட்டுக்கு வரும் காவல்துறையினர் அனைவரும் மஞ்சப்பையில் கோப்புகள் வைத்து எடுத்துக் கொண்டு வரும் புகைப்படங்களை சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாகு அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னையில் இரண்டாவது நாளாக இன்று(அக்டோபர்4) மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட வன அலுவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொள்ளும் மாநாடு நடைபெற்று வருகின்றது. இதில் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்களும் கலந்து கொண்டு பேசினார்.
முதல் நாளான நேற்று(அக்டோபர்3) தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் “நமது சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்றால் பிளாஸ்டிக் பயன்பாட்டை நாம் அறவே ஒழிக்க வேண்டும். பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு மஞ்சப்பைகளை பயன்படுத்துவதை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்” என்று அதிகாரிகளுக்கு உத்தரவும் அறிவுரையும் அளித்தார்.
இதைத் தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று(அக்டோபர்4) காவல் துறை அதிகாரிகள் அனைவரும் கோப்புகள் துணியால் செய்யப்பட்ட மஞ்சள் பைகளில் வைத்து எடுத்து வந்தனர். இதை புகைப்படம் எடுத்து சுற்றுச்சூழல் செயலர் சுப்ரியா சாகு ஐ.ஏ.எஸ் அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அந்த பதிவில் சுப்ரியா சாகு ஐ.ஏ.எஸ் அவர்கள் “சென்னையில் நடைபெற்று வரும் மாவட்ட ஆட்சியர்கள், வன அலுவலர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாட்டுக்கு வரும் காவல்துறையினர் அனைவரிடமும் மஞ்சள் பை இருக்கின்றது. இந்த மஞ்சள் பையில் அவர்கள் முக்கியமான கோப்புகளை சுமந்து செல்கின்றனர். இந்த மஞ்சள் பை பிளாஸ்டிக் பைகளில் தாக்குதலில் இருந்து பூமியை பாதுகாக்கும் ஒரே வழி ஆகும். பூமிக்கு உகந்த பஞ்சப் பையை அனைவரும் பதப்படுத்தப்படுவோம் என்று உறுதி கூறுங்கள்” என்று பதிவிட்டுள்ளார் அந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.