குழந்தைகள் உண்ணும் துரித உணவுகளில் கலந்துள்ள மாத்திரைகள்! வைரல் வீடியோ!
துரித மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களில் உள்ள கலப்படம் மற்றும் காலாவதியான பொருட்களே வளரும் பிள்ளைகளுக்கு பல பிரச்சினைகளுக்கு முக்கியக் காரணமாக உள்ளது. ஒரு இருபது வருடங்களுக்கு முன்பு இருந்தது போல யாருமே தரத்தினைமுதன்மையாக பார்ப்பதில்லை.
தற்போதெல்லாம் பணத்தை முக்கியத்துவமாக அதாவது பிரதானமாக வைத்துதான் பல தொழில்களை பலர் செய்து வருகின்றனர். உடம்புக்கு நல்லதா? என்றெல்லாம் பார்ப்பதில்லை. பார்ப்பதற்கு நன்றாக இருக்கின்றதா? உடனே வாங்கி சாப்பிட்டு விடலாம் என்றுதான் பலரும் யோசிக்கிறார்கள்.
அதிலும் சிறு குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் உருவாக்கப்படும் துரித உணவுகளை தரம் இல்லாமல் உருவாக்கி விற்கின்றனர். அதைத்தான் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுகின்றன. அதற்கு தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்களும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. எல்லா கடைகளிலும் அதை தான் முதன்மையாக வைத்து காட்டுகின்றனர்.
பெற்றோரும் குழந்தைகள் ஆசையாக விரும்பி சாப்பிடுகிறார்கள். எனவே நாமும் அதை வாங்கிக் கொடுத்து விடுகிறோம். இந்நிலையில் சில தீனிபண்டங்களில் போதை மாத்திரைகள் இருப்பதாகவும், அதனை உட்கொண்டால் குழந்தைகளுக்கு பக்கவாதம் ஏற்படுவதாகவும், தற்போது புதிய வடிவிலான வைரலான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதை அடுத்து திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி ஜெகதீஸ் சந்திரபோஸ், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் பூந்தமல்லியில் உள்ள கடைகளில் அதுவும் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் தின்பண்டங்களில் மொத்தமாக விற்கும் சில கடைகளில் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் அதிகாரிகள் கேக்கை பிரித்து கலப்படம் மற்றும் போதை மாத்திரைகள் உள்ளதா? என்று சோதித்துவிட்டு கடைகளில் காலாவதியான பொருட்களை விற்க கூடாது எனவும் வியாபாரிகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தனர்.