கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளுக்கு சென்ற ஆறாம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. நேற்று இந்த தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை ஆரம்பமானது. முதலே கேரளாவில் இடதுசாரிகள் கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வந்த நிலையில், 99 இடங்களில் ௮௧ தொகுதிகளில் இடதுசாரிகள் வெற்றி அடைந்தது.
இந்த நிலையில். இரண்டாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்க்க இருக்கும் பினராயி விஜயனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.கேரள மாநிலத்தில் பல வருடங்களுக்குப்பின் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்திருக்கிறது.இந்த நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அந்த மாநிலத்தின் ஆளுனர் ஆரிப் முகமது தாணுவிடம் திருவனந்தபுரத்தில் கொடுத்திருக்கிறார். ஆட்சி அமைப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.