கேரளாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணி 99 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை மறுபடியும் தக்க வைத்துக் கொண்டது. அந்த கட்சியின் தலைவர் பினராயி விஜயன் முதல்வராக பதவியேற்பார் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் முடிவுகள் கடந்த 2ஆம் தேதி வெளியாகி இருந்த சூழ்நிலையில், பல காரணங்களால் இந்த பதவியேற்பு நிகழ்ச்சியை தாமதமாக நடைபெறுகிறது. இடைப்பட்ட காலத்தில் புதிய அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
இவ்வாறான சூழ்நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரம் சென்ட்ரல் மைதானத்தில் நடந்து வரும் பதவியேற்பு விழாவில் இரண்டாவது முறையாக கேரள மாநிலத்தின் முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அந்த மாநிலத்தின் ஆளுநர் ஆரிப் முகமது கான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன்பிறகு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார் ஆளுநர்.
இந்த நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயனை அடுத்து புதிய அமைச்சர்கள் 20 பேர் பகுதி ஏற்றுக்கொண்டார்கள். நோய்த்தொற்று பாதிப்பை கருத்தில் வைத்து மிகுந்த எச்சரிக்கையுடன் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் இந்த நிகழ்வில் 600 பேர் மட்டுமே பங்கேற்க இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. பினராய் விஜயன் பதவியேற்பு விழாவில் தமிழக அரசின் சார்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கு ஏற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.