மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கும் அன்னாசி பழம்! இதன் மற்ற நன்மைகள் என்ன?
நம்முடைய உடலுக்கு பல ஊட்டச்சத்துக்களை அள்ளித் தரும் அன்னாசி பழத்தை நாம் சாப்பிடும் பொழுது என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பது குறித்து இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
நாம் விரும்பி சாப்பிடும் ஆரஞ்சு, ஆப்பிள், வாழை, மாம்பழம் போன்ற பல பழங்களில் அன்னாசி பழமும் ஒன்று. அன்னாசி பழத்தில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. அன்னாசி பழத்தில் உடலுக்குத் தேவையான பாஸ்பரஸ், இரும்புச் சத்துக்கள், வைட்டமின்கள் ஆகியவை அதிகமாக உள்ளது.
மேலும் இதில் கால்சியம், வாழ்த்துக்கள், பொட்டாசியம் ஆகிய சத்துக்களும் உள்ளது. இந்த அன்னாசி பழத்தை சாப்பிடும் பொழுது நம்முடைய உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
அன்னாசி பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…
* அன்னாசி பழத்தில் ப்ரோமோலைன் என்ற சத்து உள்ளது. இது நம்முடைய மூட்டில் ஏற்படும் தேய்மானத்தை தடுக்கின்றது. இதனால் நமக்கு மூட்டு வலி ஏற்படாமல் இருக்கும்.
* அன்னாசி பழத்தில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது. இதனால் அன்னாசி பழத்தை நாம் சாப்பிட்டு வரும் பொழுது நமக்கு ஏற்படும் காயம் விரைவாக ஆறும்.
* அன்னாசி பழத்தில் கால்சியம் சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. அதே போல மெக்னீசியம் சத்துக்கள் அதிகளவில் இருக்கின்றது. இதனால் நம்முடைய உடலில் உள்ள எலும்புகளுக்கு அதிக பலம் கிடைக்கின்றது.
* அன்னாசி பழத்தில் அதிகளவு நார்ச்சத்துக்கள் இருக்கின்றது. இதனால் அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது.
* அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது நம்முடைய ஜீரண மண்டலம் வலிமை பெறுகின்றது.
* அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும்பொழுது நம்முடைய உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து வெளியேறுகின்றது. இதனால் நம்முடைய உடல் எடையும் குறைகின்றது.
* அன்னாசி பழத்தில் வைட்டமின் ஏ சத்துக்கள் உள்ளது. இதனால் அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிடும் பொழுது பார்வை குறைபாடு பிரச்சனை சரி செய்யப்படுகின்றது.
* பெண்கள் அன்னாசி பழத்தை சாப்பிடும் பொழுது அவர்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுத்தல் பிரச்சனையை இது சரி செய்யும்.