மீனம் – இன்றைய ராசிபலன்!! உறவுகள் மூலம் நன்மைகள் உண்டாகும் நாள்!!

0
102
Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!

மீனம் – இன்றைய ராசிபலன்!! உறவுகள் மூலம் நன்மைகள் உண்டாகும் நாள்!!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உறவுகள் மூலம் நன்மைகள் உண்டாகும் நாள். நிதி சிறப்பாக உள்ளது. கணவன் மனைவி அற்புதமான பாதையில் பயணிப்பார்கள். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

 

உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு உருவாகலாம். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக பயண வாய்ப்புகள் மேம்படுவதால் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். கொடுக்கல் வாங்கல்கள் மிகச் சிறப்பான பாதையில் செல்லும். சிலருக்கு பொன் பொருள் ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

 

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு திடீரென வெளியூர் பிரயாணம் ஒன்று உண்டாகலாம். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உறவுகள் மூலம் சில நன்மைகளை கிடைக்க பெறுவார்கள்.

 

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் அனுகூலமாக செயல்படுவது உங்கள் மனதிற்கு ஆறுதலை அளிக்கும். அரசியல்வாதிகள் பயணங்கள் மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வார்கள்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.