புதுகோட்டை அருகேயுள்ள அரிமளம் சாலையில் சுரங்கம் போன்ற பள்ளம்!  வாகன ஓட்டிகள் கோரிக்கை!

0
122

புதுகோட்டை அருகேயுள்ள அரிமளம் சாலையில் சுரங்கம் போன்ற பள்ளம்!  வாகன ஓட்டிகள் கோரிக்கை!

புதுகோட்டை மாவட்டத்தை சேர்ந்த ராயவரத்தில் இருந்து காணப்பூர் வழியாக காரைக்குடிக்கு செல்லும் வலி உள்ளது.இது ஒற்றை சாலையாக இருந்தது.அதன் பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த சாலையை மாவட்ட நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு சாலை புதுப்பிக்கப்பட்டது.பின்னர் அந்த சாலையில் இருந்த பழைய பாலங்களை அகற்றி புதிய பாலங்களை கட்டப்பட்டன.

மேலும் சாலையில் பாம்பாறு பாலம் மற்றும் ஆனைவாரி கண்மாய்,அப் பகுதியில் கடந்த சில நாட்களாக கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் பாலம் மழை பெய்ததாள் பாலம் சேதம் அடைந்துவிட்டது.ஆதலால் மழை தொடர்ந்து வந்ததால் அந்த சாலையில் மண்ணரிப்பு ஏற்ப்பட்டு சாலையின் நடுவில் சுமார் 10அடி அழத்திற்கு பெரிய பள்ளம் ஏற்ப்பட்டது.

அப்பகுதியில் உள்ள 50க்கு மேற்ப்பட்ட கிராம மக்கள்வசித்து வருவதால் அந்த சாலையில் பஸ் போக்குவரத்தும் உள்ளது. பின்னர் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லுபவர்களுக்கு அந்த சாலையில் உள்ள பள்ளம் தெரியாததால் விபத்துக்குக் உள்ளாகி விடும். வாகன ஒட்டியளர்கள் பள்ளத்தில்  விழுந்து விட கூடாது என்று அப்பகுதியில் உள்ளவர்கள் பனை ஓலையை பள்ளத்தினுள் வைத்தனர்.

மேலும் அதை பொருட்படுத்தாமல் வாகன ஓட்டிகள் விபத்துக்கு உட்படுவார்கள் என அறிந்து எனவே போக்குவரத்துதுறை அதிகாரிகளுடன் தெரிவித்து அந்த பள்ளத்தை சரி செய்வது ஒரு பக்கம் இருக்கட்டும் தற்சமயம் வாகன ஓட்டிகள் அறியும் படி பள்ளத்தில் எச்சரிக்கை பலகையை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை அளித்து வந்தனர்.

பின்னர் பாலத்தை கட்டி இரண்டு வருடங்களே ஆகிறது.அதனுள் பாலம் சேதம் அடைந்ததாள் அதை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் அந்த பகுதியை சார்ந்த மக்கள் அறிக்கை அளித்து வந்தனர்.