பிதுர் தோஷம் நீக்கும் பரிகாரம்

0
169

தட்சிணாயனத்தின் முதல் மாதமான ஆடி மாதம் இறை வழிபாட்டிற்கு மிகவும் சிறந்ததாக இருக்கிறது. பெற்றோருடன் வாழ்ந்த காலங்களில் அவர்களை சரியாக கவணிக்க இயலாதவர்கள் கூட பிதுர்பூஜை செய்து வழிபட்டால் மனச்சுமைகள் குறையும், பெற்ற பிள்ளைகளை எந்த சூழ்நிலையிலும், மன்னித்து பழக்கமான பெற்றோர்கள் இந்த விஷயத்திலும், மன்னித்து விடுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

காவிரிக்கரை, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், படித்துறை திருச்சி முக்கொம்பு, மயிலாடுதுறை நந்தி கட்டம், பவானி முக்கூடல், உட்பட பல நீர்நிலைகளில் பக்தர்கள் அதிக அளவில் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்வார்கள். நதிக்கரைகள் மட்டுமல்லாமல் கடற்கரை தலங்களான ராமேஸ்வரம், தனுஷ்கோடி, மூன்று கடல்களும் சங்கமிக்கும் கன்னியாகுமரி, பூம்புகார், வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளும் பிதுர் பூஜைகளுக்கு உகந்ததாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஒரு சில கோவில்களும் பிதுர் பூஜை செய்ய உகந்ததாக சொல்லப்படுகிறது அந்த விதத்தில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி அமாவாசை அன்று மூதாதையர்களுக்கு சிறப்பு பூஜை செய்வது மிகவும் சிறப்பு. அந்த சமயத்தில் மூங்கில் தட்டில் வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழங்கள், மரங்கள், வாழைக்காய், பூசணிக்காய் விதைகளை வைத்து அதனை கோவில் அர்ச்சகரிடம் கொடுத்து அம்மன் சன்னதியில் சமர்ப்பணம் செய்கிறார்கள்.

மறைந்த தங்களுடைய பெற்றோரின் பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்யச் சொல்கிறார்களே அதன் பின்னர் பூஜை செய்யப்பட்ட அந்தத் தட்டினை வயதான ஒரு அந்தணரிடம் சமர்ப்பணம் செய்கிறார்கள். இல்லை என்றால் வயதான சுமங்கலி பெண்ணிடம் அதனை கொடுத்து அவர்களுடைய காலில் விழுந்து ஆசி பெறுகிறார்கள். வசதியானவர்கள் அன்றைய தினம் அன்னதானம் செய்வதுடன் ஆடை தானமும் செய்கிறார்கள்.

தஞ்சையிலிருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு செல்லும் வழியில் கண்டியூரில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்றன திருத்தலம் திருப்பந்துருத்தி இந்த தலமும் ஆடி அமாவாசைக்கு ஏற்ற திருத்தலம் தான் என்று சொல்லப்படுகிறது.