நண்பர்களுடன் ஏரியில் விளையாட சென்ற மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்! சேலத்தில் பரபரப்பு!

0
194
Pity what happened to the student who went to play in the lake with his friends! Excitement in Salem!

நண்பர்களுடன் ஏரியில் விளையாட சென்ற மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்! சேலத்தில் பரபரப்பு!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சாமிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் வேலு.இவருடைய மகன் கபிசேனா.இவர் கருப்பூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு படித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று கல்லூரி விடுமுறை என்பதால் நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஏரியில் குளிப்பதற்காக படகில் சென்றுள்ளனர்.

இதனையடுத்து ஏரியின் மையப்பகுதியில் சென்று படகில்லிருந்து  ஏரியில் குதித்து விளையாடி கொண்டிருந்தனர்.நண்பர்கள் விளையாடுவதை கண்டு ஏற்பட்ட ஆசையால் கபிசேனாவும் நீச்சல் தெரியாமல் ஏரியில் குதித்துள்ளார்.உடனே அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.சக மாணவர்கள் அக்கபக்கத்தினர் உதவியுடன் தீயணைப்பு துறை மற்றும் கருப்பூர் போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

மேலும் மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.இரவு நேரம் என்பதால் மாணவனின் உடல் தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் இன்று காலை மாணவனின் உடல் தேடும் பணி தொடங்கியது. பல மணி நேரம் தேடுதலுக்கு பிறகு மாணவனின் உடல் ஏரியில்லிருந்து மீட்கப்பட்டது.இதனைதொடர்ந்து  இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.