பாஜக முக்கிய பிரமுகர்கள் தமிழகத்தை நோக்கி தொடர் பயணம்! இரவில் சந்தித்த முதலமைச்சர்!!!

0
173

பாஜக முக்கிய பிரமுகர்கள் தமிழகத்தை நோக்கி தொடர் பயணம்!
இரவில் சந்தித்த முதலமைச்சர்!!!

சென்னை: பாஜக கூட்டணியினர் தோல்வியை தழுவிய நிலையில்
சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார்.

துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு பதவி ஏற்று 2 ஆண்டுகள் ஆகிறது. அவர் மாநிலங்களவை தலைவராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய Listening, Learning and Leading என்ற புத்தகம் வெளியீட்டு விழா இன்று காலை 10.30 மணி அளவில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடக்கிறது.

புத்தகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிடுகிறார். நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதற்கிடையே, இன்று நடைபெறவுள்ள புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு நேற்று சென்னை வந்தடைந்தார்.
இவரை
தொடர்ந்து, உள்துறை மந்திரிஅமித்ஷா-வும் நேற்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ச்சியாக, ஆளுநர் மாளிகையில் தங்கிய அமித்ஷாவை நேற்றிரவு முதல்வர் பழனிசாமி சந்தித்தார்.

இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அண்மையில் ரத்து செய்தது. மேலும் காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடந்து வருகிறது. இந்த நேரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்துள்ளார். அவர் வருகையை முன்னிட்டு, வரலாறு காணாத அளவுக்கு போலீஸ் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையம் முதல் நிகழ்ச்சி நடைபெறும் கலைவாணர் அரங்கம் வரை சாலையின் இருபுறமும் சுமார் 3000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்