இன்று முதல் பலத்த மழைக்கு வாய்ப்புள்ள இடங்கள்! இதில் உங்கள் ஊர் இருக்கானு பாருங்கள்!
கடந்த வாரத்தில் வங்கக்கடல் தென்கிழக்கு பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்றது.அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.அந்த புயல் கரையை கடந்த நிலையில் தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்து வந்தது.கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர்.
மேலும் கடந்த ஒரு சில தினங்களாக தான் பள்ளிகள் அனைத்து தொடங்கி மக்கள் இயல்பு வாழ்கைக்கு திரும்பியுள்ளனர்.மேலும் கடந்த தினங்களாகவே பேரிடர் மீட்பு குழுவினர் சாலையில் கிடந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.ஆனால் அதற்கான எந்த ஒரு தகவலும் முறையாக கிடைக்கவில்லை.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.
மேலும் நாளை தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.இதனை தொடர்ந்து வியாழன் மற்றும் வெள்ளி கிழமை அன்று தமிழக கடலோர மாவட்டங்கள்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ராமநாதபுரம், புதுக்கோட்டை,தஞ்சாவூர்,திருவாரூர்,நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.சென்னை மற்றும் அதன் புகர் நகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளனர்.
இன்று மற்றும் நாளை குமரிக்கடல் பகுதிகள்,மன்னார் வளைகுடா,தமிழக கடலோரப்பகுதிகள்,இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் அதிகபட்சமாக 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் அதனால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.