இந்த தேதிகளில் கனமழை வெளுத்து வாங்கப்போகும் இடங்கள்! மீனவர்களுக்கு எச்சரிக்கை!
கடந்த வாரம் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.அந்த புயல் கரையை கடந்த நிலையில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்தது.கனமழை எதிரொலியாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் கடந்த இரு தினங்களாக தான் பள்ளிகள் செயல்பட தொடங்கியது.மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வரும் திங்கள்கிழமை தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் டிசம்பர் 20 ஆம் தேதி சிவகங்கை,புதுக்கோட்டை,தஞ்சை,திருவாரூர்,தூத்துக்குடி ,ராமநாதபுரம்,நாகை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் 21 ஆம் தேதி புதன் கிழமை புதுக்கோட்டை ,தஞ்சாவூர்,திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர் ஆகிய இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.மேலும் அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
புதன் கிழமை ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை வாய்ப்புள்ளது.குறிப்பாக இன்று அரபிக் கடலின் மத்திய மேற்கு, தென்மேற்கு பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளது.அதனால் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.