Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மதுரையை தலைநகராக மாற்ற திட்டம்? அமைச்சர் கோரிக்கை

மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலை நகரமாக அறிவிக்கக்கோரி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் உத்தரவின் பேரில், மதுரையின் புறநகர் பகுதி மற்றும் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் திருமங்கலத்தில் ஆலோசனை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தனர்.

இந்தக் கூட்டத்தில் மதுரை மேற்கு மாவட்ட கழக பொதுச்செயலாளர் ஆர்.பி உதயகுமார் பங்கேற்றார். அதில் அவர் மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டுமென தமிழகத்தின் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்து சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்றினர்.

 Plan to make Madurai the capital?  Minister's request

Plan to make Madurai the capital? Minister’s request

அந்தத் தீர்மானம் குறித்து செய்தி வெளியிட்டுள்ள அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. சென்னையில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில், எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தின் இரண்டாவது தொழில் நகரமாக மாற்ற வேண்டும் என, தென் மாவட்டங்களில் உள்ள பெரும்பான்மையான மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

குஜராத் அருகே இருந்தாலும் காந்திநகர் பாதியும், அலகாபாத் பாதியும் என அரசு அலுவலகங்கள் உள்ளன. மேலும் ஆந்திராவில் 3 தலைநகரங்கள் உருவாகின்றன. தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் 2 தலைநகரங்கள் உள்ளன.

ஆகவே, இந்த வகையில் மேற்கூறிய கோரிக்கையினை ஏற்று மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக மாற்ற வேண்டும். இதனால் தென் மாவட்டங்களில் உள்ள மக்களின் வளர்ச்சிக்கு வாய்ப்பாக அமையும்’ என அந்த செய்தியில் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version