Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குடியரசு தின சிறப்பு பேரணியில் நவீன ஆயுதங்கள் மக்கள் பார்வைக்கு அணிவகுக்க திட்டம்!

வருகின்ற ஜனவரி 26 ஆம் நாள், குடியரசு தின விழாவை முன்னிட்டு சிறப்பு பேரணி நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான சிறப்பு பேரணியில் நவீன ஆயுதங்களை மக்கள் பார்வைக்காக அணிவகுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதாவது பி.எம்.பி-2, டி-90 ரகத்தின் பீரங்கிகள், பீஷ்மா பீரங்கிகள், தற்காலிகமாக பாலம் அமைக்க உபயோகிக்கப்படும் எந்திரம், பினாகா ஏவுகணையை ஏவுகின்ற அமைப்பு, பிரமோஸ் ஏவுகணைகள், வான் பாதுகாப்பு ஆயுதங்கள்.

மேலும் சம்விஜய் எனப்படும் மின் அணு போர் ஆயுதம் உள்ளிட்டவை மக்களின் பார்வைக்காக இந்த ஆண்டு நடக்கவிருக்கும் குடியரசு தின சிறப்பு பேரணியில் அணி வகுக்கப்படும் என்று ராணுவம் திட்டமிட்டுள்ளது.

அத்துடன் ராணுவ வீரர்கள் அனைவரும் வழக்கமான ஆயுதங்களுடன் அணிவகுப்பில் பங்கேற்பார்கள் என்றும் ராணுவம் அறிவித்துள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version