கஜகஸ்தான்: அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் காலை 8:30 மணியளவில் பாகுவிலிருந்து ரஷ்யாவின் க்ரோஸ்னிக்கு கிளம்பியது. இந்த விமானத்தில் பணியாளர்கள் உள்பட 72 பயணிகள் பயணம் செய்தனர். கஜகஸ்தானில் அக்டாவ் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது. விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்பு பலமுறை வானில் வட்டம் அடித்தது. விமானி நீண்ட நேரம் முயற்சி செய்தும் விபத்தை தவிர்க்க முடியவில்லை.
பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் என மொத்தம் 72 பேருடன் சென்ற விமானம் கீழே விழுந்தது. மேலும் இந்த விமானம் தீப்பற்றி எரியும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. விபத்தில் பலர் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விமானம் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.