தமிழகத்தில் கொரோனா மிகவும் அதிகரித்த நிலையில் உள்ளதால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மருத்துவ நிபுணர்களுடன் மீண்டும் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகிறது.
தமிழகத்தில் என்றும் இல்லாத அளவில் 3500 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் ஆங்காங்கே மாநிலம் வாரியாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வந்த நிலையில் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு போட வருகின்ற திங்கட்கிழமை முதவர் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை செய்கிறார்.
இந்த கூட்டத்தில் அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் முழு முடக்கம் குறித்து ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.மேலும் இந்த ஆலோசனைக்கு பிறகு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று தகவல் தெரிகிறது.