Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாடி தோட்டம் அமைக்க திட்டமா? அப்போ செடி கொடி வளர்க்க இந்த தொட்டி வாங்குங்கள்!!

தற்போதைய சூழலில் அனைவருக்கும் இயற்கை மீதான ஆர்வம் அதிகரித்த வண்ணம் உள்ளது.உண்ணும் காய்கறிகளில் இருந்து அனைத்து விஷயங்களும் ஆரோக்கியமற்றதாக மாறிவருகிறது.

குறிப்பாக காய்கறிகளில் இராசயனங்கள்,பூச்சிக் கொல்லிகள் பயன்பாடு அளவிற்கு அதிகமாகே நடைபெறுகிறது.காய்கறிகளை பிரஸாக வைக்க பலவித சாயங்கள்,ஆபத்தான இரசாயனங்களை பயன்படுத்துகின்றனர்.

பச்சை காயை ஒரே நாளில் பழுக்க வைக்க பல ஆபத்தான யுத்திகளை வியாபாரிகள் கையாண்டு வருகின்றனர்.இதையெல்லாம் பார்த்து அஞ்சி தற்பொழுது பலரும் வீட்டு தோட்டம்,மாடி தோட்டம் வைப்பதில் ஆர்வத்தை செலுத்தி வருகின்றனர்.நம் வீட்டிலேயே வளர்க்கப்படும் காய்கள்,பழங்கள் ஆரோக்கியமானதாக இருக்கும் என்பதால் பலருக்கும் தோட்டம் வைப்பதில் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

வீட்டு தரையில் இடம் இல்லாதவர்கள் தற்பொழுது மாடியில் தோட்டம் வைத்து பல வகையான காய்கறிகள் மற்றும் பழச் செடிகளை வளர்த்து வருகின்றனர்.மாடி தோட்டம் வைப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதற்கு தேவைப்படும் சாதனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்த வண்ணம் உள்ளது.

மாடி தோட்டம் அல்லது வீட்டு தோட்டம் ஏதுவாக இருந்தாலும் செடி,கொடி,மரங்கள் வைக்க நிச்சயம் தொட்டி தேவைப்படும்.நமக்கு தெரிந்த்து என்னவோ மண் தொட்டி,சிமெண்ட் தொட்டி தான்.ஆனால் இன்று பல வகைகளில் தொட்டி விற்பனை செய்யப்படுகிறது.

மண் தொட்டி,சிமெண்ட் தொட்டியை தவிர்த்து செராமிக் மற்றும் பிளாஸ்டிக் தொட்டிகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

மண் தொட்டி

இந்த வகை தொட்டியில் செடி வைத்தால் அவை நன்றாக வளரும்.மண் தொட்டியில் வளரும் செடிகளின் வேருக்கு தேவையான ஆக்சிஜன் எளிதில் கிடைத்துவிடும்.

சிமெண்ட் தொட்டி

இந்த வகை தொட்டி நீண்ட வருடங்கள் உழைக்கும்.இருப்பினும் இந்த வகை தொட்டியில் வளரும் செடிகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காது என்பதால் மண்ணை அடிக்கடி கிளற வேண்டும்.

பிளாஸ்டிக் தொட்டி

இந்த தொட்டியில் செடி வைத்தால் அவற்றின் வளர்ச்சி நன்றாக இருக்காது.இவ்வகை தொட்டி தண்ணீரை உறிஞ்சாது என்பதால் வேர் அழுகல்,பூச்சி தாக்கம் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

செராமிக் தொட்டி

இந்த வகை தொட்டியை முறையாக பராமரிக்க வேண்டும்.இல்லையென்றால் இதன் ஆயுட்காலம் குறைந்துவிடும்.இவ்வகை தொட்டிகள் பார்க்க அழகாக தெரிந்தாலும் எளிதில் உடையும் தன்மை கொண்டுள்ளதால் அதை நாம் கவனமாக பராமரிக்க வேண்டும்.

Exit mobile version