Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரபல பாடகருக்கு கொரோனாவா? யாரும் என்னை தொடர்பு கொள்ள வேண்டாம்!!!

பிரபல பின்னணி பாடகரான  எஸ்.பி. பாலசுப்பிரமணியன் நாட்களுக்கு முன்  உடல் குறைவினால் சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சோதனைக்காக சென்றுள்ளார். அப்போது அவருக்கு மைல்டு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பிரபல பின்னணி பாடகரான எஸ்பி பாலசுப்பிரமணியன் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட 16க்கும் மேற்பட்ட மொழிகளில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். 

அதுமட்டுமல்லாமல்,6 முறை சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். அதோடு ஏராளமான பிலிம் ஃபேர் விருதுகளையும் பல்வேறு மாநில அரசுகளின் விருதுகளையும் பெற்றுள்ளார் எஸ்.பி. பாலசுப்பிரமணியன். அதுமட்டுமின்றி நாட்டின் மிக உயரிய விருதுகளான மத்திய அரசின் பத்மஸ்ரீ, பம்பூஷன் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவருக்கு கொரோனா உறுதியான நிலையில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் தனக்கு மூன்று நாட்களாக சளி காய்ச்சல் உள்ளதாகவும், தற்பொழுது லேசான கொரோனா அறிகுறி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இன்னும்  இரண்டு நாட்கள் கழித்து  டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். அதுவரை எனக்கு நலம் விசாரிப்பதற்காக என்னுடன் யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் மேலும் நான் நலமாக உள்ளேன் என்று தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

இவர்  சமீபத்தில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல பாடல்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Exit mobile version