Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தயவு செய்து அவரை விட்டு விடுங்கள் அவர் இறந்துவிட்டார்!! ஏ .ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டாம்!!

Please leave him alone he is dead!! Don't use AI technology!!

Please leave him alone he is dead!! Don't use AI technology!!

தற்போது சினிமா துறையில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட வரும் ஏ.ஐ தொழில்நுட்பம் சில மாற்றங்களை சினிமா துறையில் ஏற்படுத்தி வருகிறது. கடைசியாக விஜய் நடித்த ‘தி கோட்’ திரைப்படத்தில் விஜயகாந்த் உருவப்படத்தை ஏ.ஐ  தொழில்நுட்பத்தின் மூலமாக புதுப்பித்துள்ளனர். மேலும் அதே இடத்தில் இளையராஜா மகள்  மறைந்த பாடகி பவதாரணி அவர்களின் குரலும் இடம்பெற்றுள்ளது.

மேலும் ரஜினிகாந்தின் லால்சலம் படத்தில் மறைந்த பாடகர் பம்பா பாக்கியா குரலும் இடம்பெற்றிருக்கும். மற்றும் தற்போது ரஜினி நடித்த வேட்டையன் திரைப்படத்தில் மலேசியா வாசுதேவன் ஆகிய குரல்கள் இடம்பெற்றிருந்தன. இதனை ஏ.ஐ  தொழில்நுட்பத்தின் மூலம் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் மறைந்த பாடகர் எஸ் பி பி அவர்களின் குரலை ஏ.ஐ  தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்த அவரது மகனான எஸ்பிபி சரண் அவர்களுக்கு திரைத் துறையில் இருந்து அதிகமாக அனுமதி கேட்டு வருகின்றனர்.

மேலும் அவர் அதற்கு அனுமதி கொடுக்க மறுத்து விட்டார். ஏனெனில் அவர் ஏ.ஐ  தொழில்நுட்பத்தின் மூலம் தனது அப்பாவின் குரலில் கேட்க எனக்கு விருப்பமில்லை. எனவே ஏ.ஐ தொழில்நுட்பத்தில் பயன்படுத்தும் குரல்  உணர்வுபூர்வமாக இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version