Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தயவு செய்து என் தந்தையை ஜெயிலில் அடையுங்க!!! போலீசில் புகார் அளித்த 13 வயது சிறுவன்!!!

தயவு செய்து என் தந்தையை ஜெயிலில் அடையுங்க!!! போலீசில் புகார் அளித்த 13 வயது சிறுவன்!!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் தந்தை குடித்துவிட்டு மது போதையில் ரகளை செய்வதாக 13 வயது சிறுவன் ஒருவன் போலிசில் புகார் அளித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை அடுத்த முல்லை நகரில் கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்யும் ஜாபர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பரானா என்ற பெண்ணுக்கும் திருமணம் ஆகி 18 ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு 5 ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் ஜாபர் தினமும் குடித்துவிட்டு தினமும் மனைவி பரானாவுடன் தகறாரில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து மனம் உடைந்த பரானா நேற்று(செப்டம்பர்1) மருந்து குடிக்க அக்கம் பக்கத்தினர் பாரனாவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். தற்பொழுது பரானா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து ஜாபர் தனது மகன்களை அடித்துள்ளார். இதை கண்ட ஜாபர் அவர்களின் இரண்டாவது மகன் நபில்(13 வயது) தனது சிறிய சைக்கிளை எடுத்துக் கொண்டு காவல் நிலையம் சென்றுள்ளார். பின்னர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் பார்த்தசாரதி அவர்களிடம் தன் தந்தை குடித்துவிட்டு அடிப்பதாகவும் ரகளை செய்வதாகவும் புகார் அளித்துள்ளான்.

மேலும் “தந்தை ஜாபர் குடித்துவிட்டு குடும்ப செலவுகளுக்கு பணம் தருவது கிடையாது. என்னுடைய 15 வயதுள்ள அண்ணன் கபில் சென்னையில் கூலி வேலை செய்து வருகிறான். நான் இங்கு சமோசா விற்று குடும்பத்தை பார்த்து கவனித்து வருகிறேன். என்னுடைய மூன்று தம்பிகளையும் நான் தான் பள்ளிகளில் படிக்க வைக்கிறேன்.

என் தந்தை தினமும் குடித்துவிட்டு அம்மாவுடன் தகறாராரில் ஈடுபட்டு வந்தார். இதனால் மனவேதனை அடைந்து என் அம்மா தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் குடித்து தற்பொழுது குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். என் தந்தையை எப்படியாவது கைது செய்து சிறையில் அடைத்து விடுங்கள்” என்று கூறினான்.

இதையடுத்து சிறுவன் அளித்த புகாரின் அடிப்படையில் ஜாபரை காவல் நிலையத்துக்கு அழைத்தனர். பின்பு ஆய்வாளர் பார்த்தசாரதி அவர்கள் ஜாபரை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

Exit mobile version